search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் பணிகள்"

    • தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
    • அப்பட்டி பகுதியில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் பணிகளை பார்வையிட்டார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் குந்தா ஊராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கிண்ணக்கொரை பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் பிக்கட்டி சமுதாயக்கூடம் முன்பு அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சாலை, ரூ.5.70 லட்சம் மதிப்பில் அப்பட்டி பகுதியில் நடை பாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய்-உறிஞ்சிக்குழி ஆகிய பணிகளை தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வை யிட்டார்.

    பின்னர் ஓசட்டி பகுதி யில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.9.96 லட்சம் மதிப்பில் 78 வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின்கீழ் வராகப்பள்ளம் நீரோடையில் ரூ.5.45 கோடி மதிப்பிலான கூட்டு க்குடிநீர் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகே ஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சங்கீதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், குந்தா தாசில்தார் கலை ச்செல்வி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஸ்ரீதரன், நந்த குமார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×